சுவையான சிக்கன் கட்லெட் செய்வது எப்படி?

0
சுவையான சிக்கன் கட்லெட் செய்வது எப்படி? | Chicken Cutlet Recipe in Tamil

இன்று, உங்கள் வீட்டில் புதிதாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்ய யோசிக்கிறிர்களா? உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமாறியாகவும் சத்துள்ளதாகவும் இருக்கவேண்டுமா? சுவையான மொறு மொறு சிக்கன் கட்லெட் செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.

சிக்கன் கட்லெட்:

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் – 200 கிராம் (போன்லெஸ்)
  • உருளைக்கிழங்கு – 2
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 2
  • ரஸ்க் – 4
  • முட்டை – 2
  • தனியா தூள் – ½ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  • கரம் மசாலா – ½ ஸ்பூன்
  • சோம்பு – ½ டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

சிக்கன், உருளைக்கிழங்கு வேகவைத்தல்:

  1. 200 கிராம் போன்லெஸ் சிக்கன் துண்டுகளை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் ஊற்றி அழுத்தச் சமையற்கலனில் (பிரஷர் குக்கர்) போட்டு மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்.
  2. அதுபோல, தனியாக இன்னொரு குக்கர் அல்லது அதே குக்கரில் உருளைக்கிழங்கைப் போட்டு மூன்று விசில் வரும்வரை வேகவைக்கவும்.

கட்லெட் மசாலா:

  1. வேகவைத்த சிக்கன் துண்டுகளை கலவைக் கருவியில் (மிக்ஸி) போட்டு ஒரு சுற்று சுற்றி அரைக்கவும். அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
  2. பிறகு, வேகவைத்த உருளைக்கிழங்கை தண்ணீர் வடித்து தோலை உரித்து உருளைக்கிழங்கை நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
  3. பின், அடுப்பில் ஒரு கடாய் வைத்து, கடாய் சூடானதும் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் ½ ஸ்பூன் சோம்பு போடவும். சோம்பு பொரிந்தவுடன் சிறிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை எண்ணெயில் போடவும். அதனுடன், நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சிறிது கருவப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும், அரைத்த சிக்கனைச் சேர்த்து கிளறியப்பின் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், ½ ஸ்பூன் கரம் மசாலா, ½ ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக, சிறிது கொத்தமல்லித் தழை பொடியாக நறுக்கி மேலே தூவி கிளறி, கடாய்யை இறக்கவும்.
  5. இப்பொழுது, நீங்கள் செய்து வைத்த கட்லெட் மசாலா ஆறியவுடன், சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவேண்டும்.

கட்லெட் மேற் பூச்சல் (cutlet coating):

  1. இப்பொழுது, நான்கு ரஸ்க் துண்டுகளை கலவை கருவியில் (மிக்ஸி) போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
  2. இன்னொரு பக்கம், ஓர் கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து அதில் ¼ ஸ்பூன் மிளகு தூள் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. பின், சிக்கன் துண்டுகளை முட்டை கலவையில் நனைத்து ரஸ்க் தூளில் பிரட்டி வைத்து, அதனை உள்ளங்கையில் வைத்து அழுத்தி வட்டவடிவம் செய்துக்கொள்ளவும்.

கட்லெட் பொரித்தல்:

  1. அடுப்பில் ஒரு கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  2. பின், மேற் பூச்சல் செய்யப்பட்ட சிக்கன் கட்லெட் மசாலாவை எண்ணெயில் போட்டு நன்றாக பொன்னிரம் வரும்வரை பொரித்தால் சுவையான மொறு மொறு சிக்கன் கட்லெட் ரெடி.

குறிப்பு: சிக்கன் கட்லெடிற்கு சாஸ் தொட்டும் சாப்பிடலாம் அல்லது புதினா மல்லி சட்னியையும் தொட்டு சாப்பிடலாம். நன்றாக இருக்கும். கீழே, புதினா மல்லி சட்னி செய்யும் முறையைப் பற்றி காணலாம்.

புதினா மல்லி சட்னி:

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி இலைகள் – ½ கட்டு
  • புதினா இலைகள் – ¼ கட்டு
  • பச்சை மிளகாய் – 3
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மல்லி சட்னிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கலவை கருவியில் (மிக்ஸி) போட்டு அரைத்து கொள்ளவும். அருமையான புதினா மல்லி சட்னி ரெடி.

சிக்கனின் ஆரோக்கிய நன்மைகள்:

சிக்கனில் மிகவும் அதிக அளவு புரத சத்து இருக்கிறது. இதனால், உடல் வலிமை கூடும். சிக்கனில் அதிக அளவு விட்டமின் B, விட்டமின் D, கால்ஷியம், இரும்பு சத்து, துத்தநாகம் (zinc) மற்றும் சிறிதளவு விட்டமின் A, விட்டமின் C அடங்கியுள்ளது.

மேலும் இது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள, New Facts World மற்றும் Instagram இல் பின்தொடர்க. இவ்விடுக்கை பிடித்திருந்தால், கீழ் கண்ட ஏதேனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *