அமெரிக்கா சுதந்திரம் அடைந்த வரலாறு
அமெரிக்கா, உலகின் பலநாட்டு மக்களின் கனவு பிரதேசம். கல்வி, பொருளாதாரம், அறிவியல், ஜனநாயக அரசியல் என்று பல துறைகளிலும் உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா முன்மாதிரியாய் திகழ்கிறது. இன்றும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உலகின் பலநாட்டு மக்களின் கனவு பட்டியளிலும் நிச்சயம் இருக்கும். இவ்வாறு பலரின் கனவுகளை சுமந்து வாழும் அமெரிக்கா இன்று உலகின் மிகபெரிய வல்லரசு நாடாகத் திகழ்தாலும், ஒரு காலத்தில் இந்தியாவைப் போல சுதந்திரத்திரக்காகவும் ஆங்கிலய அரசின் அழுமைக்கு உட்பட்டும் சுதந்திரத்திரக்காகப் போராடிக் கொண்டிருந்தது. அதனைக் குறித்த நிகழ்வுகளைப் பற்றி இவ்விடுகையில் பார்ப்போம்.
அமெரிக்கா நிலபரப்பின் கண்டுப்பிடிப்பு
கி.பி. 1492ல் கிரிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்கா என்னும் பரந்த நிலபரப்பைக் கண்டுபிடித்தார். இவரைத் தொடர்ந்து அந்த நிலப்பரப்பில் வாழ்வதற்கு ஏற்றதா என்று ஆய்வு செய்வதற்கு இத்தாலி நாட்டைச் சேர்ந்த வணிகரும் களஆய்வாளரும் ஆன அமெரிக்கஸ் வேஸ்புக்கி அங்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவின் பல இடங்களுக்கும் சென்ற வேஸ்புக்கி தனது பயண அனுபவத்தைத் தொகுத்து “நியூ வேர்ல்ட்” என்னும் புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தில் தன் அமெரிக்கா என்னும் சொல் முதல் முதலில் எழுதப்பட்டது.
அமெரிக்காவில் புகுந்த ஆங்கிலேயர்கள்
வேஸ்புக்கி எழுதிய நூலின் மூலம் அமெரிக்கா குறித்த தகவல்களை இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற இரோப்பிய நாடுகள் தங்கள் நில ஆதிக்கத்தை இந்த நிலப்பரப்பில் காட்டவேண்டும் என்ற நோக்கதில் படையேடுத்துவந்தனர். அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என்ற பூர்வ குடிமக்கள் வாழ்ந்து வந்த நிலையில் 1600 ஆம் ஆண்டுகளில் இரோப்பியர்களின் குடியேற்றம் அமெரிக்காவில் தொண்டாங்கியது. முதன்முறையாக 1620 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து “மே பிலோவர்” எனும் கப்பல் நூற்றி இரண்டு (102) பிரிட்டன் குடிமக்களைச் சுமந்து கொண்டு அமெரிக்காவை நோக்கிப் புறப்பட்டது. அறுபத்து ஆறு (66) நாட்கள் கடின கடற்பயணத்திற்குப் பிறகு தற்போதைய மசசூசட்ஸை மே பிலோவர் வந்தடைந்தது. இந்த இடத்திற்கு பிளைமௌத் எனும் இங்கிலாந்தில் உள்ள நகரின் பெயர் வைத்து முதல் காலனியை அமெரிக்காவில் ஆங்கிலேயர் அமைத்தனர். மே பிலோவர் கப்பலை அடுத்து இங்கிலாந்திலிருந்து பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்ககில் மக்கள் அமெரிக்காவிற்கு வரத்தொடங்கினர். 1607-1776 வரையிலும் அமெரிக்க மண்ணில் தங்களை நிலைநிறுத்தி கொண்ட ஆங்கிலேயர்கள் அட்லாண்டிக் கடற்கரை பகுதிகளில் மொத்தம் 13 குடியேற்பு காலனிகளை அமைத்து ஆங்கில அரசின் கீழ் கொண்டுவந்தனர். முதலில் ஆங்கிலேய நிர்வாகத்தில் திருப்தியடைந்த அமெரிக்காவின் பூர்வீக குடிமக்கள், 1700 களின் பாதியில் அடுத்தடுத்து கொண்டுவரப்பட்ட அதிரடி சட்டங்களால் ஆங்கிலேயர்கள் மீது அதிருப்திக்கு உள்ளாயினர்.
பூர்வீக மக்கள் மீது அதிக வரி விதித்த ஆங்கிலேய அரசு
ஆங்கிலேய அரசு தனது பொருளாதாரத்தை வலுபடுத்தும் நோக்கில் பூர்வீக அமெரிக்க மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தது. 1764ஆம் ஆண்டு சர்க்கரைதயாரிக்கும் மொலேசிஸ் உட்பட பல வணிக பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது. மேலும் அமெரிக்காவில் குடியேறிய இங்கிலாந்து ராணுவதிற்கு தேவையான வீடு, உணவு உட்பட பூர்வீக அமெரிக்கர்கள் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின், 1765 ஆம் ஆண்டு தபால் முத்திரை என்னும் சட்டத்தை கொண்டுவந்தது. இதன்படி, பூர்வீக அமெரிக்கர்கள் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் இங்கிலாந்தின் தபால் முத்திரை கட்டாயம் வாங்கியாக வேண்டும். இதன் மூலம், நேரடி வரி விதிப்பை பூர்வீக அமெரிக்கர்கள் மத்தில் அமல்படுத்தியதால் அந்த குற்றமற்றவர்கள் கடும் கோவப்பட செய்து புரட்சியில் ஈடுப்பட தூண்டியது.
இதனையடுத்து ஆங்கிலேயக் கீழக்கு இந்திய நிறுவனத்தின் தேயிலை இறக்குமதியை எதிர்த்து முதல் புரட்சியை பூர்வீக அமெரிக்க மக்கள் ஆரம்பித்தனர். இந்த புரட்சிகள் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்தன. இதனால், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கடும் கோவம் கொண்டு வன்முறையில் இறங்கியது. பூர்வீக குடிமக்களை கண்டிக்கும் நோக்கில் பிரிட்டன் அரசு பாஸ்டன் துறைமுகத்தை மூடியது. இதனால் பாஸ்டன் நகரத்து வணிகர்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியாமல் தவித்தனர். மேலும், பூர்வீக அமெரிக்கர்களின் சட்ட அதிகாரத்தையும் நீதி வழங்கும் அதிகாரத்தையும் அதன் தலைவர்களிடம் இருந்து ஆங்கிலேய அரசு பரித்தனர். இதனால், பிரிட்டிஷ் ஆளுமையின் கீழ் இயங்கி வந்த விர்ஜினியாவை தவிர்த்த 12 மாகாணங்களும் ஒன்று சேர்த்து “ஃபர்ஸ்ட் காண்டினெண்டல் காங்கிரஸ்” என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் மூலம், ஆங்கிலேய அரசு வாங்கும் வரியை கைவிட வேண்டி கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினர். ஆங்கிலேய அரசோ காலனிகளின் எந்த கோரிக்கைகளும் ஏற்காமல் அவர்கள் மீது அதிகளவில் வன்முறையைக் கட்டவிழ்த்தது.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை முறியடித்த அமெரிக்கர்கள்
கோரிக்கைகளை ஏற்காத ஆங்கிலேய அரசுக்கு எதிராக திரண்ட தேசபற்று நிறைந்த அமெரிக்கர்கள் புரட்சிக்கு தயாராகினர். அதன்படி, பிரிட்டிஷ் அரசின் பொருட்களை புறக்கணித்தும் எழுத்தின் மூலமாகவும் வன்முறை மூலமாகவும் ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடத் துவங்கினார். மேலும், ஜார்ஜ் வாஷிங்க்டனை படைத் தளபதியாக அறிவித்து ஆங்கிலேயப் படைகளை எதிர்த்து போரில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 1775 ஆம் ஆண்டு இரண்டாம் காண்டினெண்டல் காங்கிரஸ்” அமைப்பு மூலம் அமெரிக்கர்கள் விதித்த கோரிக்கையையும் ஆங்கிலேய அரசு ஏற்கவில்லை. ஆனாலும், புரட்சி போராட்டத்தை கைவிடாத அமெரிக்கர்கள் பல நாடுகளைத் தங்களது போராட்டதிரற்கு ஆதரவாக திரட்டினர். அத்துடன், அமெரிக்க காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளும், திப்புசுல்தான் போன்ற இந்திய மன்னர்கள் சிலரும், அமெரிக்கப் போரை ஆதிரத்தாக வரலாறு கூறுகிறது. அதன் தொடர்ச்சியாக, 1776 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசைத் தீரத்தோடு எதிர்த்த அமெரிக்கர்கள் வெற்றியை நோக்கிச் செல்ல தொடங்கினர்.
சுதந்திர அமெரிக்கா உருவானது!
இங்கிலாந்தின் காலனிகளாக இருந்த 13 மாகாணங்கள் சேர்ந்து சுதந்திரமான தனி நாடக அறிவித்துக் கொண்டன. மேலும், இந்த மாகாணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் விடுதலையை 1776 ஜூலை 4ம் நாள் பிரகடனப்படுத்தின. அதே நாளில் தான், அமெரிக்காவின் சுதந்திர பிரகடன வரைவு தாமஸ் ஜெஃபர்சனின் பெரும் பங்களிப்புடன் உருவானது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஜூலை மாதம் 4 ஆம் நாள் ஆண்டுதோறும் அமெரிக்காச் சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தறப்போது, அமெரிக்கா 245வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. அன்றைய தினம் சிறு நகரம் முதல் பெரிய நகரம் வரை சிறப்பு ஊர்வலம் வானவேடிக்கை என அமெரிக்காவே வண்ணாமயமாக மாறிவிடும். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான இந்த சுதந்திர வரலாற்றை நெஞ்சில் நினவு கூர்ந்த படி தங்களது தேசப்பற்றை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர் அமெரிக்க மக்கள்.
முடிவுரை
இன்றைய அமெரிக்கா கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல், ஜனநாயக அரசியல் என்று வளர்ச்சி பெற்றிருந்தாலும் அதன் சுதந்திர வரலாறு பல உயரிய தியாகங்களையும், உயிரிழப்புகளையும், வீரம் செறித்த போராட்டத்தையும் உள்ளடக்கியது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
மேலும் இது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள, New Facts World மற்றும் Instagram இல் பின்தொடர்க. இவ்விடுக்கை பிடித்திருந்தால், கீழ் கண்ட ஏதேனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரவும்.
Now I am ready to do my breakfast, when having my breakfast
coming yet again to read further news.
I’m really enjoying the design and layout of your site.
It’s a very easy on the eyes which makes it much
more pleasant for me to come here and visit more often. Did you hire out a designer to create your theme?
Superb work!