வாட்ஸ்அப்பின் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து!!

2
Whatsapp

உங்கள் தினசரி பயன்பாட்டை பாதிக்கக்கூடிய சில புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உலகம் முழுவதும் வெளியிட வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. வாட்ஸ்அப் சில கடுமையான நிபந்தனைகளைக் கொண்டுவர இறுகிறது, இது நம் பயன்பாட்டைப் பயன்படுத்துவதை நிறுத்த நம்மை வழிவகுக்கலாம்.

Table of Contents

இந்த இடுகையில் பதிலளிக்கப்பட்ட கேள்விகள் எவை?

  1. தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்க வேண்டுமா?
  2. ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது கொள்கையுடன் உடன்பட முடியுமா?
  3. தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்கவில்லை என்றால், மே 15க்குப் பிறகு உங்கள் கணக்கு நீக்கப்படுமா?

புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாட்ஸ்அப் ஏன் கொண்டு வர வேண்டும்?

வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான முகநூல், இன்ஸ்ட்டாகிராம் நிறுவனத்தை வாங்கியப் பிறகு, மேலும் முகநூல் போலவே உங்கள் தரவின் கண்காணிப்பபு ஏற்ப விளம்பரங்கள் காண்பிக்கின்றன. அதுபோல, அவர்கள் வாட்ஸ்அப்பையும் கையகப்படுத்தி ஜனவரி, 2021 முதல் ஒரு புதிய தனியுரிமைக் கொள்கையை வெளியிட்டு அதன் மூலம் விளம்பரப் பொருளாதாரத்தை உருவாக்க முயன்றனர் அல்லது பயன்பாட்டைப் பயன்படுத்துவதை நிறுத்த வழியுறுதினார்கள்.

வாட்ஸ்அப் ஏன் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்ட விரும்புகிறது?

இப்போதுவரை, வாட்ஸ்அப் செயலி 2 பில்லியன் பயனாளர்கள் எண்ணிக்கை கொண்ட ஒரு இலவசச் செயலி ஆகும். பேஸ்புக் நிறுவனம் எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் தங்கள் மற்ற துணை பயன்பாடுகளைப் போலவே வாட்ஸ்அப்பிலிருந்தும் வருவாய் ஈட்ட விரும்பினர். ஆனால், தங்கள் தினசரி பயன்படுத்தும் செயலில் விளம்பரங்களை வைத்திருப்பதில் பயனர்களுக்கு விருப்பமில்லை. அதுமட்டுமில்லை, பயனர்களின் தரவை அவர்கள் கண்காணித்து அதற்கு ஏற்ப விளம்பரங்கள் தங்களது செயலிகளில் காண்பிப்பர். இது ஒரு தனி நபரின் தனியுரிமைகளைக் கேடுப்பது போல் இருக்கிறது.

நீங்கள் ஏன் வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்கக்கூடாது?

முகநூல் நிறுவனத்தின் மற்ற துணை பயன்பாடுகளைப் போல், வாட்ஸ்அப் ஒரு சமூக ஊடக பயன்பாடு அல்ல. எனவே, அவர்கள் பயன்பாட்டில் விளம்பரம் செய்ய விரும்பினால், உங்கள் பயன்பாட்டில் துல்லியமான இலக்கு விளம்பரங்களுக்கு உங்கள் நண்பர்கள், குடும்பங்கள் அல்லது நெருங்கியவர்களுடன் உங்கள் தனிப்பட்ட தரவுகள் தேவைப்படுகிறது. இங்கே, உங்கள் தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் தனியுரிமை பாதிக்கப்படும்.

நீங்கள் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், மே 15க்குப் பிறகு உங்கள் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படுமா?

சமீபத்தில், வாட்ஸ்அப்பின் செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி, ‘மே 15, 2021 க்குப் பிறகு எந்த வாட்ஸ்அப் கணக்கும் நீக்கப்படாது. ஆனால், கொள்கையில் சில மாற்றங்கள் இருக்கலாம்’. எனவே, அவர்கள் பயன்பாட்டைப் பயன்படுத்துவதைத் தடுக்கப் போவதில்லை, அல்லது அவர்கள் உங்கள் கணக்கை நீக்கப் போவதில்லை. பின்பு, தங்களது செயலில் விளம்பரங்களைக் காண்பிக்க அவர்களின் உத்தி என்னவாக இருக்கும்?.

தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா?

இதற்கு பதில் இப்போதைக்கு ஆம் என்று தான் நான் கூறுவேன். ஆனால், பேஸ்புக் நிறுவனம் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்ய பல உத்திகளைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அதை எப்படி அவர்கள் செய்ய முடியும் என நீங்கள் கேட்கலாம்? சில மாதங்களுக்கு முன்பு, பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு புதிய தனியுரிமைக் கொள்கையை வாட்ஸ்அப் செயல்படுத்த உள்ளது என்று அறிவித்தது, அங்கு உங்கள் தனிப்பட்ட தரவு அதை ஏற்றுக்கொள்வதன் மூலம் முகநூல் நிறுவனத்திருக்குப் பகிரப்படுகிறது. பல பயனர்கள் சிக்னல் செயலி, டெலிகிராம் செயலி போன்ற பிற செயலிகளுக்கு மாறினர். ஆனால், நிறைய பயனர்களுக்கு அதில் போதுமான அம்சங்கள் மற்றும் இணக்கத்தன்மை இல்லாததால் வாட்ஸ்அப்பிற்குத் திரும்பினர்.

உங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவைபதருக்கு  பேஸ்புக் நிறுவனம் வைத்துள்ள உத்திகள் என்ன?

இப்போது, அவர்கள் பயனர்கள் மற்றும் பயனரின் தரவைகள் நிறுவனத்திருக்குத் தேவைப்படுகிறது. பயனர்கள் இந்த செயலில் இருக்கும் அம்சங்களை விரும்புகிறார்கள், மேலும் வேறு எந்த செயலிகளையும் பயன்படுத்த விரும்பவில்லை, எனவே அவர்கள் கணக்கை நீக்குவதற்கான யோசனையைக் கைவிட்டனர், எனவே பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ள பயனர்களை தூண்டலாம் என நினைக்கிறது முகநூல் நிறுவனம்.  முதலாவதாக, செயலியை திறப்பதற்க்கு முன் தனியுரிமைக் கொள்கை ஒப்பந்தத்தை காண்பிக்கிறார்கள். இதனால், சில பயனர்கள் தன்னை அறியாமல் ஒப்பந்ததை ஏற்றுக்கொள்ளவைக்கலாம் என எண்ணுகிறார்கள். ஒப்பந்தத்தை மூடுவதன் மூலம் பயனர்கள் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் பயன்பாட்டைப் பயன்படுத்தினால், அவர்களையும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்ய வேறு உத்திகளும் உள்ளன. பெரும்பாலான பயனர்கள் பல அம்சங்கள் காரணமாக வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்கள் செயலியில் இருக்கும் முக்கிய அம்சங்களை இதுபோன்றப் பயனர்களின் பயன்பாட்டிருக்கு இல்லாததுபோல் செய்ய முடிவு செய்துள்ளனர், இதனால் பயனர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டும் அல்லது மற்ற இலவச செயலிகுளை விட மிகக் குறைவான அம்சங்களைக் கொண்ட ஒரு செயலியாக தரையிறக்கபடுவதற்கு வாய்ப்புள்ளது. தாய் நிறுவனம் மற்ற செய்திபயன்பாடுகளுடன் தரவைப் பகிர்வதை நிறுத்த முடிவு செய்தால், செயலிக் கணக்கை மாற்றுவது மிகவும் கடினமான சூழ்நிலையாக மாறிவிடும். உங்கள் தனியுரிமை குறியாக்கம் செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் செய்தியிடல் பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான தீர்வு என்ன?

இப்போதைக்கு, இதற்கு இரு வழிகளே உள்ளது: ஒன்று, புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது; மற்றொன்று மற்ற செய்தியிடல் பயன்பாடுகளுக்கு மாறுவதாகும். சிலர் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை விட மாதாந்திர சந்தாவாக அதைப் பயன்படுத்த விரும்பலாம். ஆனால், இதுவரை தாய் நிறுவனத்திடமிருந்து அந்த யோசனைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. உங்கள் தரவு மிகவும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுக்கு பொருத்தமான சிறந்த தீர்வு சிக்னல், டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் பயன்பாடுகளுக்கு நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும், எந்த நேரத்திலும் வாட்ஸ்அப் முக்கிய அம்சங்களை செயல் இலக்க செய்யலாம், பின்பு உங்கள் தரவு மற்றும் தொடர்புகளை இழக்க வேண்டியிருக்கலாம்.

தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்கனவே ஏற்றுக் கொண்டு இருந்தால் என்ன செய்வது?

உங்களுக்குத் தெரியாமல் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஏற்றுக் கொண்டு இருந்தால், கவலைப்பட வேண்டாம். நீங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தும் வரை அவர்கள் உங்கள் தரவை கண் காணிப்பார்கள். நீங்கள் கணக்கை நீக்கினால், உங்கள் தரவை கண் காணிக்கவோ அல்லது உங்கள் தனியுரிமையைத் திருடவோ எவ்வித வழியும் இல்லை.

முடிவுரை:

செய்திகளை அனுப்பவும், புகைப்படங்கள், கோப்புகள், வீடியோக்கள், குரல் அழைப்பு, வீடியோ அழைப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளவும், அதைப் பயன்படுத்த ஒரு அற்புதமான இடைமுகத்தைக் கொண்டதாகவும் வாட்ஸ்அப் செயலி மிகவும் எளிதான பயன்பாடாக இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகள் & நிபந்தனைகள் உங்கள் தனியுரிமையை அச்சுறுத்தியுள்ளன மற்றும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு உங்களை நிர்ப்பந்தித்துள்ளன, மேலும் அதில் விளம்பரம் செய்வது அவர்களின் தனியுரிமையைத் தேடும் பயனர்களுக்கு பயன்பாட்டை மிகவும் பயன்படுத்த முடியாததாக ஆக்குகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க சிறந்த வழி மற்ற செய்திபயன்பாடுகளுக்கு மாறி உங்கள் தரவை உங்கள் புதிய செய்திபயன்பாட்டிற்கு வாட்ஸ்அப்பில் இருந்து மாற்றுவது, மற்றும் உங்கள் மற்ற கணக்கின் மூலம் உங்களைத் தொடர்பு கொள்ள உங்கள் தொடர்புகள் அனைவருக்கும் செய்தியை அனுப்பிவைத்துக் கொள்ளவது மிகவும் நன்று.

மேலும் இது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள, New Facts World மற்றும் Instagram இல் பின்தொடர்க. இவ்விடுக்கை பிடித்திருந்தால், கீழ் கண்ட ஏதேனும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பகிரவும்.

2 thoughts on “வாட்ஸ்அப்பின் பயனர்களின் தரவுகளுக்கு ஆபத்து!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *